காஷ்மீருக்கு நேரில் சென்று கூட ஆய்வு செய்வேன்: உச்சநீதி மன்ற தலைமை நீதிமதி.

  0
  4
  Supreme court judge

  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தவிர்க்கப் பட்டதற்கு எதிராக எழுந்த மனுக்களை இன்று விசாரித்தது உச்சநீதி மன்றம். 

  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தவிர்க்கப் பட்டதற்கு எதிராக எழுந்த மனுக்களை இன்று விசாரித்தது உச்சநீதி மன்றம். 

  ஜம்மு- காஷ்மீருக்கு அளித்து வந்த அரசியலைப்பு சட்டம் 377 ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அதனை எதிர்த்து பல தரப்பினர் நீதி மன்றத்தில் மனு அளித்தனர். இந்நிலையில், இன்று அந்த அனைத்து மனுக்களையும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

  Judge

   

  அதில், காஷ்மீரின் குழந்தைகள் நலன் மற்றும் உரிமை குறித்து கங்குலி, சந்தா சின்ஹா உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும், காஷ்மீர் நீதிமன்றத்தை அணுகுவது சிரமமாக உள்ளது எனவும் நீதி மன்றத்தில் புகார் அளித்தனர். 

   

  அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய், ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தேவை ஏற்பட்டால் காஷ்மீரை தானே நேரில் சென்று ஆய்வு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.