காஷ்மீரில் லேண்ட்லைன் இணைப்புகள் அனைத்தும் செயல்பாட்டு வந்து விட்டது- உள்துறை அமைச்சகம் தகவல்

  9
  நெஸ்லே இந்தியா தயாரிப்புகள்

  காஷ்மீரில் அனைத்து லேண்ட்லைன் இணைப்புகளும் செயல்பாட்டுக்க வந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  கடந்த மாதம் 5ம் தேதியன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் லேண்ட்லைன், மொபைல் மற்றும் இன்டர்நெட் என அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

  காஷ்மீரில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கியதால் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. அரசு நிர்வாகம் முழுமையாக செயல்பட தொடங்கியது. லேண்ட்லைன் இணைப்புகள் கணிசமான அளவில் கொடுக்கப்பட்டது. மேலும் மத்திய அரசும் காஷ்மீர் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

  மத்திய உள்துறை அமைச்சகம்

  இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காஷ்மீரில் அனைத்து லேண்ட்லைன் இணைப்புகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. குப்வாரா பகுதியில் போஸ்ட்பெய்டு மொபைல் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி நிலவரப்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், உதவிதொகை விண்ணப்பங்கள் சமர்பிக்க, இ-டெண்டர் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்காக 10  இன்டர்நெட் மையங்கள் மற்றும் 5 முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  அமித் ஷா

  பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை அதிகரித்து வருகிறது. அனைத்து மருத்துவமனைகளும் முழுமையாக செயல்பட தொடங்கி விட்டன. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிக்ள சிகிச்சை பெற்றனர். ஜம்மு அண்டு காஷ்மீரில் உள்ள அனைத்து வங்கிகளும், ஏ.டி.எம்.களும் செயல்படுகிறது. ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.108 கோடிக்கு மேல்  பணத்தை எடுத்துள்ளனர். போதுமான அளவில் தானியங்கள் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.