காஷ்மீரில் தேசிய கொடியேற்றுகிறார் அமித்ஷா!

  0
  1
  Amitshah

  சுதந்திர தினத்தன்று, காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் அமித்ஷா தேசிய கொடியேற்றவுள்ளார் என தகவல் வெளியாகியுள்‌ளது.

  சுதந்திர தினத்தன்று, காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் அமித்ஷா தேசிய கொடியேற்றவுள்ளார் என தகவல் வெளியாகியுள்‌ளது.

  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன்படி அங்கு காஷ்மீர் கொடியின்றி தேசியக் கொடி மட்டுமே பறக்க வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் வரும் 73 ஆவது சுதந்திரத்தினத்தன்று காஷ்மீரில் ‌இந்தி‌ய கொடி ஏற்றப்படவுள்ளது.

  amitshah

  காஷ்மீர் மறுசீரமைப்புக்குப் பிறகு அங்கு செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய கொடியேற்றுகிறார். இதையடுத்து, அங்கு‌ பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.