காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

  10
  dffdh

  தீவிரவாதிகள் தாக்கியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

  ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் தாக்கியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

  ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) 2,500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனம் கொண்டு மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். தப்பிக்க முயன்ற வீரர்களை சரமாரியாக சுட்டதில், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

  கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் முடக்கி விடப்பட்டுள்ளனர்.