காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு குறைந்த கல் வீச்சு சம்பவங்கள்…..

  0
  2
  pjimage (2)

  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு அங்கு கல் வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளது. அதேசமயம் நடந்த கல் வீச்சு சம்பவங்களில் பெரும்பாலவானவை ஸ்ரீநகரில் நடந்து இருப்பதுதான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், அன்றைய தினமே மாநிலங்களவையில் ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 மசோதாவை நிறைவேற்றியது. அதற்கு அடுத்த நாள் மக்களவையில் அந்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன், காஷ்மீரில் அரசியல் தலைவர்களை காவலில்  வைத்தது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

  பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு தாக்குதல்

  காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காஷ்மீர் அரசு நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு அங்கு போலீஸ் மற்றும் துணை ராணுவ படைவீரர்கள் மீது போராட்டக்காரர்கள் அடிக்கடி நடத்தி வந்த கல் வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கல் வீச்சு தாக்குதல்

  காஷ்மீரில் கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை சுமார் 250 கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் அதிகம் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் இல்லாத ஸ்ரீநகரில் நடந்து இருப்பதுதான் ஆச்சரியம்.  ஸ்ரீநகரில் 220 கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளிலும், சுதந்திர தினத்தன்றும் அதிகளவில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது.

  அதேசமயம் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் காணப்படும் புல்வாமாவில் வெறும் 6 கல் வீச்சு சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளது. 6 முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற  கல் வீச்சு சம்பவங்களில் 7  சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர். 25 பாதுகாப்பு படை வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்.