காவி சேவகன் பிரதமரான கதை: வெளியானது மோடி வெப் சீரிஸ்?

  0
  2
  மோடி வெப் சீரிஸ்

  பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் இன்று (ஏப்ரல் 5) வெளியாவதாக இருந்தது. இந்தத் திரைப்படம் மோடிக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கும் எண்ணத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

  மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாவதின் சர்ச்சை ஒருபுறம் இருக்க, சைலண்டாக மோடி வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.

  பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் இன்று (ஏப்ரல் 5) வெளியாவதாக இருந்தது. இந்தத் திரைப்படம் மோடிக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கும் எண்ணத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த சர்ச்சைகளால் படம் வெளியாகும் தேதியை அதன் தயாரிப்பாளர் தள்ளி வைத்தார். இந்நிலையில் சைலண்டாக மோடி வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.

  modi

  மோடி வெப் சீரிஸ் 10 பாகங்களை உடையது. அதில் 5 பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 40 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மிர் புடா மற்றும் ராதிகா ஆனந்த் இணைந்து எழுதிய இக்கதையை உமேஷ் சுக்லா இயக்கியுள்ளார். மோடி திரைப்படம் அளவு இதன் டிரெய்லர் பீதியை கிளப்பவில்லை என்றாலும், இதன் நோக்கமும் மோடியை முக்கியமான இந்திய ஆளுமையாக சித்தரிப்பதுதான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் மோடியின் பங்களிப்பு, இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை எதிர்த்தது என பல்வேறு விஷயங்களை இதில் பதிவு செய்துள்ளனர். இதன் அடுத்த 5 பாகங்களில், மோடியின் அரசியல் பயணம் பற்றி விவரிக்கப்படும் என தெரிகிறது.

  மோடி

  Modi journey of a common man என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் eros now-இல் வெளியிடப்பட்டுள்ளது. மோடி திரைப்படம் அளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தாது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடுத்த 5 பாகங்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.