காவல்நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காவலர் தலையில் பேன் பார்க்கும் குரங்கு! 

  0
  1
  Monkey with police

  உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு காவல்நிலையத்தில் குரங்கு ஒன்று காவலருக்கு பேன் பார்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் உலா வருகிறது. 

  உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு காவல்நிலையத்தில் குரங்கு ஒன்று காவலருக்கு பேன் பார்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் உலா வருகிறது. 

  Monkey

  பிலிபிட் காவல்நிலையத்தில் உள்ள காவல் அதிகாரி  ஷ்ரீகாந்த் திவேதி வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரின் தோல் பட்டியில் அமர்ந்துகொண்ட குரங்கு , அவரின் தலையில் பேன் பார்க்கிறது. குரங்கை பார்த்து சற்றும் அஞ்சாமல்  காவல் ஆய்வாளர் தனது பணியை தொடர்ந்து செய்கிறார். இந்த வீடியோவை பிரியங்கி அகர்வால் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ட்விட்டர் மட்டுமின்றி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் வைரலாகிவருகிறது. 

   

   

  இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் நடத்திய விசாரணையில், மனஅழுத்தத்தை போக்க ஷ்ரீகாந்த் குரங்கு ஒன்றை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பதாகவும், அவ்வப்போது அந்த குரங்கு அவரின் தலைக்கு மசாஜ் செய்துவிடும் என்றும் தெரியவந்துள்ளது.