காவல்துறையினருக்கு இன்று முதல் வார விடுமுறை: டாப் கியரில் செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி!

  0
  1
  ஜெகன் மோகன் ரெட்டி

  ஆந்திர மாநில காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

  ஆந்திரா:  ஆந்திர மாநில காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

  சந்திரபாபு நாயுடுவின் ஆளும்கட்சியை புறந்தள்ளி, பெரும்பான்மையான இடங்களைக்  கைப்பற்றி ஆட்சி அமைத்தார் அம்மாநில முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி.  ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டதிலிருந்து அதிரடியான பல்வேறு திட்டங்களை அறிவித்து  வருகிறார். 

  jagan

  இந்நிலையில்  ஆந்திர போலீஸாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்கும் திட்டத்தை இன்று முதல் அமல்படுத்தியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இதுகுறித்து கூறியுள்ள அம்மாநில டிஜிபி , முதல்வரின் உத்தரவின்படி சிறப்பு கமிட்டி அமைத்து 19 மாடல் விடுமுறை முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றை  யூனிட் அதிகாரிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.  தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது’ என்றார்.

  ap

  முன்னதாக குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோருக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை, ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே வரும் திட்டம், சட்டவிரோதமான மதுபானக் கடைகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து  அசத்தி வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி .