கால்சியம் சத்துக்களைத் தரும் பிரண்டைக் குழம்பு!

  0
  4
  பிரண்டைக் குழம்பு

  பிரண்டக்குழம்பு வயிற்றுப்புண் ஆற்றும். பெண்களுக்கு வீணாகும் கால்சியம் சத்துக்களை மீட்டுத் தரும் சக்தி பிரண்டைக்கு உண்டு.
  தேவையான பொருட்கள்
  பிரண்டை        -1கட்டு
  தேங்காய் துருவல்    -2டேபிள்ஸ்பூன்
  காய்ந்த மிளகாய்        -10
  தனியா            -1டீஸ்பூன்
  புளி                -சிறு எலுமிச்சை அளவு
  எள்                -1டீஸ்பூன்
  வெல்லம்            -சிறு துண்டு
  உப்பு            -தேவையான அளவு

  பிரண்டக்குழம்பு வயிற்றுப்புண் ஆற்றும். பெண்களுக்கு வீணாகும் கால்சியம் சத்துக்களை மீட்டுத் தரும் சக்தி பிரண்டைக்கு உண்டு.
  தேவையான பொருட்கள்
  பிரண்டை        -1கட்டு
  தேங்காய் துருவல்    -2டேபிள்ஸ்பூன்
  காய்ந்த மிளகாய்        -10
  தனியா            -1டீஸ்பூன்
  புளி                -சிறு எலுமிச்சை அளவு
  எள்                -1டீஸ்பூன்
  வெல்லம்            -சிறு துண்டு
  உப்பு            -தேவையான அளவு

  piradai

  செய்முறை
  புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலை  இப்போது உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பிரண்டை துண்டுகளை வதக்க வேண்டும். பிரண்டையைச் சுத்தம் செய்யும் போது கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் கைகளில் எரிச்சல் உண்டாகும். தேங்காய் துருவலையும் பொன்னிறமாக வதக்க வேண்டும். மிளகாய், தனியாவை தனித்தனியாக வறுத்து அரைக்கவேண்டும். தேங்காய் துருவலையும் வதக்கின பிரண்டையும் அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் கொதிக்கும் புளிக்கரைசலில் கொட்டி வறுத்து எள்ளைப் பொடி செய்து வெல்லத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.