காலை ஒடித்து ,கையை முறித்து , கழுத்தை நெறித்து ….கோடீஸ்வர பாட்டி கொடூரமாக கொலை ..,

  0
  3
  representative image

  குலாபி ஷெட்டி என்ற அந்த 75 வயது மூதாட்டி மும்பையின் வெர்சவா பகுதியில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் தனியாக வசித்து வந்தார்.அவர் வீட்டின் கீழ் பகுதியை ஒரு ஹோட்டலுக்கு மாதம் 2 லட்சம் வாடகைக்கு விட்டிருந்தார் .மேலும் அந்த வீட்டையும் இடித்து அபார்ட்மெண்ட் கட்ட 25 கோடிக்கு விலை பேசியிருந்தார்.

  மும்பையில் வெர்சவா பகுதியில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டியொருவர்,ஞாயிறன்று கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .
  குலாபி ஷெட்டி என்ற அந்த 75 வயது மூதாட்டி மும்பையின் வெர்சவா பகுதியில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் தனியாக வசித்து வந்தார்.அவர் வீட்டின் கீழ் பகுதியை ஒரு ஹோட்டலுக்கு மாதம் 2 லட்சம் வாடகைக்கு விட்டிருந்தார் .மேலும் அந்த வீட்டையும் இடித்து அபார்ட்மெண்ட் கட்ட 25 கோடிக்கு விலை பேசியிருந்தார்.

  murder

  இந்த நிலையில் சென்ற ஞாயிறன்று அவரை யாரோ மர்மமான முறையில் கை ,கால்களை கட்டி கொலை செய்து பாத்ரூமுக்குள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.இந்த சம்பவம் பற்றி அவரின் மருமகள் சுஜாதா,அவர் சம்பவம் நடந்த அன்று இரவு முதல் போனை எடுக்காததால் காலை வந்து வீட்டை திறந்து பார்த்த போது ஷெட்டி இப்படி கொலை செய்யப்பட்டு கிடந்தார் என கூறினார் ,அவர் மேலும் ஷெட்டியின் கணவரும் இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார் என்று கூறினார் .
  இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .