காலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு!

  49
  Parents Day

  இந்தியாவின் மிகச்சிறந்த ரிடையர்மென்ட் பிளான் – பிள்ளைகள் என்பது எவ்வளவு அவல நகைச்சுவை?. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்’ என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே! பெற்றதிலிருந்து 25-30 வருடங்களாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி தந்ததையே, அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப் போகிறது.

  அம்மா அப்பா ரெண்டு பேரையும் நிக்கவச்சு ‘நான் நாளும் வணங்கும் தெய்வங்கள்’னு ஒரு செல்ஃபிய ஃபேஸ்புக்ல போட்டாதான் பெற்றோர்கள் தினத்துக்கே ஒரு களை வரும் இல்லையா! இன்னைக்கி பெற்றோர்கள் தினம். “ஆஃபிஸ்க்கு லேட்டாயிடுச்சு இன்னுமா சட்னி அரைக்கலே”ன்னு காலையில்கூட அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன், அதுனால என்ன, சாயந்திரம் வீட்டுக்கு போனவுடனே, “நைட்டுக்கு என்னடா வேணும்”னுதானே கேட்பதுதானே தாய்மை?

  Parents Day

  பெற்றோர்களின் இந்த அதீத அக்கறையும் பாசமுமேகூட சிலசமயம் குழந்தைகளை வழிதவறி நடக்க வைத்துவிடுகிறது. அளவுகடந்த பாசத்தால், அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்க மனம் வருவதில்லை. நான் பெத்த என் ராசா என பெற்றபிள்ளையை அவனின் தவறின்போதும் உச்சிமுகரும் பெற்றோர், பதவி கிடைக்கும்முன்பே போஸ்டர் அடித்து பின் அசிங்கப்படும் அரசியல்வாதியின் அவஸ்தையை காண‌நேரிடும்.

  இந்தியாவின் மிகச்சிறந்த ரிடையர்மென்ட் பிளான் –  பிள்ளைகள் என்பது எவ்வளவு அவல நகைச்சுவை?. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்’ என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே! பெற்றதிலிருந்து 25-30 வருடங்களாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி தந்ததையே, அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப் போகிறது.   பெற்ற பிள்ளைகள் தீபாவளிக்கு கொளுத்துகிற புஸ்வானம் மாதிரி. திரிய பற்றவைப்பதோடு பெற்றோர்கள் கடமை முடிகிறது. “அதெல்லாம் கிடையாது, என்னுடைய பட்டாசு”ன்னு, தீயை கொளுத்திவிட்டு முகத்தை புஸ்வானம் பக்கத்துல வச்சா பொசுங்கிடும் இல்லையா! பத்த வைங்க, அதுக பாட்டுக்கு பூச்சிதறலாய் தெறித்து விழட்டும்!