கார் வாங்க போறீங்களா! ரூ.1.13 லட்சம் வரை சலுகை வழங்கும் மாருதி

  28
  பலேனோ

  மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் பலேனோ, சியாஸ் உள்பட குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ.1.13 லட்சம் வரை சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த சலுகைகள் எல்லாம் வரும் 31ம் தேதி வரை மட்டும்தான்.

  இந்திய வாகனத் துறைக்கு இந்த வருஷம் போறாத காலம் போல் தெரிகிறது. மாருதி சுசுகி இந்தியா, டாடா மோட்டார்ஸ் உள்பட அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் விற்பனை இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. தற்போது ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் என்பதால், தங்களது கையிருப்பை காலி செய்யவும், கார் விற்பனையை அதிகரிக்கவும் பல்வேறு அதிரடி சலுகைகளை இந்த மாதம் கார் தயாரிப்பு நிறுவனங்கள்  வழங்குவது இயல்பான ஒன்று.

  சியாஸ் மாடல் கார்

  மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா தனது நெக்ஸா டீலர்ஷிப் வாயிலாக விற்பனை செய்யும்  பலேனோ, சியாஸ், இக்னிஸ் மற்றும் எஸ்.கிராஸ் ஆகிய மாடல் கார்களுக்கு ரூ.1.13 லட்சம் வரை அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணமாக மாருதி சுசுகி பலேனோ (பெட்ரோல்) கார் மாடலுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரம் வரை சலுகைகளை வழங்குகிறது. மேலும் சுசுகி பலேனோ (டீசல்) காரை வாங்கினால் ரூ.67,400 வரை சேமிக்க முடியும். 

  மாருதி எஸ்-கிராஸ் மாடல் கார்

  மேலும் சியாஸ், இக்னிஸ் மற்றும் எஸ்-கிராஸ் மாடல் கார்களுக்கும் மாருதி நிறுவனம் ரூ.1.13 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. ரகத்தை (பெட்ரோல்,டீசல்) பொறுத்து சலுகைகள் மாறுபடும். மேலும், இந்த சலுகைகள் வரும் 31ம் தேதி வரை மட்டுமே செல்லும் என மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.