கார் எப்படி எரிந்தது என்று விசாரிக்க வந்த போலீஸ்… கொலையை நான்தான் செய்தேன் என்று உளறிய இளைஞர்!

  8
  car burned case

  கொடைக்கானலில் கார் எரிந்த வழக்கு பற்றி விசாரிக்க வந்த போலீசாரிடம் சகோதரிகளுக்கு காதல் டார்ச்சர் கொடுத்தவரை கொலை செய்தது பற்றி இளைஞர் ஒருவர் உளறிக்கொட்டி வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கொடைக்கானலில் கார் எரிந்த வழக்கு பற்றி விசாரிக்க வந்த போலீசாரிடம் சகோதரிகளுக்கு காதல் டார்ச்சர் கொடுத்தவரை கொலை செய்தது பற்றி இளைஞர் ஒருவர் உளறிக்கொட்டி வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளப்பாறையைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய கார் சமீபத்தில் தீவைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் முருகனின் தம்பி மணிகண்டனை போலீசார் விசாரிக்க அழைத்துச் சென்றனர். என்ன ஏது என்று புரியாத மணிகண்டன், “திருப்பதியை கொலை செய்து பள்ளத்தில் வீசியது உண்மைதான்… ஆனால் நான் மட்டும் செய்யவில்லை, நண்பர்களோடு சேர்ந்துதான் செய்தேன்” என்று கூறியுள்ளார்.

  ttn

  கார் எரிப்பு பற்றி விசாரிக்க அழைத்தால் கொலையைப் பற்றி பேசுகிறானே என்று ஜர்க் ஆன போலீசார், என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் கூறியது, “கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாளையைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கும் கூம்பூர் வயலைச் சேர்ந்த ஜான்சி ராணிக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. ஜான்சியின் தங்கை சாந்தியை நான் காதலித்து வந்தேன்.
  நாங்கள் காதலிப்பது திருப்பதிக்கு பிடிக்கவில்லை. சாந்தியையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க திருப்பதி முயற்சி செய்தார். இதனால், நாங்கள் தனியாக இருக்கும்போது திருப்பதி எங்களிடம் சண்டை போட்டார். இது குறித்து சாந்தி, ஜான்சியிடம் கூறியுள்ளார். சாந்தியின் வாழ்க்கையை திருப்பதி சீரழிக்க முயல்கிறார் என்பதை உணர்ந்த ஜான்சி, திருப்பதியை கொலை செய்ய முடிவு செய்தார்.

  ttn

  அதன்படி ஆகஸ்ட் 14ம் தேதி ஜான்சி வீட்டுக்கு திருப்பதி வந்தார். அப்போது நான், என்னுடைய நண்பர்கள் நாகராஜ், சரத்குமார், விஷ்ணு சேர்ந்து திருப்பதியை அடித்தே கொலை செய்தோம். பிறகு, சடலத்தை தூக்கி வந்து 600 அடி ஆழ பள்ளத்தில் வீசிவிட்டோம். திருப்பதி காணாமல் போனது பற்றி விசாரித்து வந்தார்கள். யாரும் எங்களை நெருங்கவில்லை. திடீரென்று போலீஸ் அழைக்கவே, கொலை சம்பவம் தெரிந்துவிட்டது என்ற நினைத்துவிட்டேன்” என்று கூறியுள்ளான்.

  இதைத் தொடர்ந்து மணிகண்டன், ஜான்சிராணி, சாந்தி, நாகராஜ், சரத்குமார், விஷ்ணு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு தவிர மற்ற ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள விஷ்ணுவை போலீசார் தேடி வருகின்றனர்.
  கார் எரிப்பு தொடர்பாக விசாரிக்க சென்ற இடத்தில், கொலை பற்றிய தகவல் கிடைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.