கார்த்திக் சுப்புராஜின் ஆசையில் மண்ணள்ளிப்போட்ட சூப்பர் ஸ்டார்..!?

  12
  கார்த்திக் சுப்புராஜ்- ரஜினி

  ரஜினியின் அடுத்த பட வாய்ப்பு தனக்கு வரும் என்று ஆவலோடு காத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

  சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற விசயம் ஊருக்கே தெரிந்ததுதான்.எப்போதுமே ஒரு படம் ஹிட்டடித்தால் சம்பந்தப்பட்ட ஹீரோ,அடுத்த படத்துக்கும் அதே டைரக்டரைத்தான் டிக் அடிப்பார்கள்.அப்படி ரஜினியின் அடுத்த பட வாய்ப்பு தனக்கு வரும் என்று ஆவலோடு காத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

  petta

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியப்போகிறது.ஸோ,அடுத்த படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள்,இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் சூப்பர் ஸ்டாரிடமிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு அழைப்பு வந்திருக்கிறது.ஆஹா… அடுத்த வாய்ப்பும் வந்திடுச்சு என்று சந்தோஷமாகி நெருக்கமான நண்பர்கள்,உதவியாளர்களிடம் ‘தலைவர் கூப்பிடுறார் கதை சொல்லிட்டு வந்துடறேன்… அடுத்த படத்தில் இன்னும் அடிச்சு தூக்குவோம்’ என்று சொல்லிவிட்டு போயஸ் கார்ட்டனுக்கு கிளம்பிப் போயிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

  rajini

  உற்சாகமாக வரவேற்ற சூப்பர் ஸ்டார்,எப்போதும் உபசரிப்பெல்லாம் பலமாக செய்திருக்கிறார்.’என்ன லைன் வச்சிருக்கீங்க…’ என்று சூப்பர் ஸ்டார் கேட்டதும்,கார்த்திக் சுப்புராஜும் ‘ரெண்டு லைன் இருக்கு சார், இப்பக்கூட சொல்ல ரெடி’ என்று சொல்லியிருக்கிறார்.அப்பறம்தான் தெரிந்திருக்கிறது கதை கேட்டது சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மருமகன் விசாகனுக்குத்தான் கதை கேட்கிறார் என்பது.கைவசம் எதுவும் இல்லை சார்…ரெடி பண்ணிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம்.
  ஸோ..இரண்டாவது பட வாய்ப்பு,இப்போதைக்கு இல்லையா… எப்போதைக்கும் இல்லையா என்பதும் தெரியாமல்,நண்பர்களுக்கு என்ன சொல்லுவது என்பதும் புரியாமல் குழப்பதில் இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.