காரில் திடீரென பற்றிய தீ : இரண்டு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

  0
  1
  car

  இவர் இவரது நண்பர் பிரகாஷ் உடன் சேர்ந்து, மற்றொரு நண்பரைப் பார்ப்பதற்காக கோபிசெட்டிபாளையம் சென்றுள்ளார்.

  கோவையைச் சேர்ந்த  ஜகான் என்பவர் காரின் உதிரிப் பாகங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இவரது நண்பர் பிரகாஷ் உடன் சேர்ந்து, மற்றொரு நண்பரைப் பார்ப்பதற்காக கோபிசெட்டிபாளையம் சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் செல்லும் வழியிலேயே பழுதாகி நின்ற நிலையில், அதனை ஓரமாக நிறுத்தி பழுது பார்ப்பதற்காக வேகமாகக் காரை இயக்கியுள்ளார். அப்போது திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது. 

  ttn

  இதற்குள் இவர்கள் இரண்டு பேரும் காருக்குள் இருந்து கீழே இறங்க, காரின் முன் இருக்கைகள் முழுவதும் தீப்பற்றி எறிந்துள்ளது. இந்த விபத்தில் ஜகான் மற்றும் பிரகாஷ்க்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரின் தீயை அணைத்து,  ஜகான் மற்றும் பிரகாஷை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.