காரமெல் பிஸ்கட்டில் இரும்பு துண்டு! குழந்தை, பெற்றோர்களே உஷார்!! 

  0
  4
  caramel wafer

  காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கடையில் வாங்கிய காரமெல் பிஸ்கட்டில் இரும்பு துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கடையில் வாங்கிய காரமெல் பிஸ்கட்டில் இரும்பு துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நின்னக்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணா புரவிஷன் ஸ்டோரில் சிவக்குமார் என்பவர் காரமெல் வேஃபர் பிஸ்கட் வாங்கியுள்ளார்.  பிஸ்கட்டை வாங்கி தனது உறவுக்கார சிறுவனக்கு வழங்கியுள்ளார். சிறுவன் பிஸ்கட்டை கடித்து சாப்பிட்டபோது அதில் இரும்பு துண்டு இருந்துள்ளது. உடனே அதனை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்  மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் புகார் அளித்தனர். 

  caramel wafer

  புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்ற அதிகாரிகள் மற்ற பிஸ்கட் பாக்கெட்களிலும் இதுபோன்று உள்ளதா என சோதனை நடத்தினர். குஜராத்தில் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டை கடை உரிமையாளர் பாரிமுனையிலுள்ள மொத்த விற்பனைக்கடையில் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து காரமெல் பிஸ்கட் கம்பெனி மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.