காரப்பன் சில்க்ஸுக்கு ஹெச்.ராஜா புதிய மிரட்டல்… அடுத்து என்ன நடக்குமோ..?

  0
  1
  ஹெச்.ராஜா

  அவர்கள் வியாபாரத்தை கணக்கில் கொண்டு வந்துள்ளனரா என்று வருமானவரித்துறை உடனே சர்வே நடத்த வேண்டுகிறேன்.

  இந்துக் கடவுளை அசிங்கமாகப் பேசினார் என்றும், அதனால் காரப்பன் சில்க்ஸ் துணிக்கடையில் இந்துக்கள் யாரும் வியாபாரம் செய்யாதீர்கள் என்றும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. மூட்டைப்பூச்சி அளவுக்கு உள்ள இந்த ஊரில் இருக்கும் ஒருவரது கடையை பகிரங்கமாகக் குறிப்பிட்டு அதைப்  புறக்கணியுங்கள் என்று பாஜக தலைவர் எச். இராஜா நேரடியாக பதிவு போட்டார். இதனால் காரப்பன் கடையில் ஆயிரக்கணக்கில் நடந்த வியாபாரம் லட்சக்கணக்கில் திடீரென உயர்ந்துள்ளது. 

  karappan

  இதனையடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’காரப்பன் சில்க்ஸில் வியாபாரம் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று சன் டிவியும் சுப.வீ ஆகியோர் கூறியுள்ளனர். ஆகவே இந்த ஆண்டு அந்த நிறுவனம் பலமடங்கு வருமானவரி செலுத்தனும். அவர்கள் வியாபாரத்தை கணக்கில் கொண்டு வந்துள்ளனரா என்று வருமானவரித்துறை உடனே சர்வே நடத்த வேண்டுகிறேன்.

   

  நான் ஏன் மெரட்டனும். ஆயிரத்தில் நடந்த யாவாரம் லட்சத்தில் நடக்குதாம். அப்ப இந்த ஆண்டு வருமானவரி 100 மடங்கு அதிகமாக கட்டணுமே’’ என அவர் தெரிவித்துள்ளார்.