‘காய்கறி குறைவா போட்டார் -தடியெடுத்து தலையில் போட்டார்’ -ஊரடங்கு நேரத்தில் உயிரைப்பறித்த இலவச திட்டம் 

  0
  10
  Rep Image

  புதன்கிழமை காலையில் புதுதில்லியில் ஷாஹ்தாராவில் உள்ள சஞ்சய் அமர் காலனியில் உள்ள சந்தையில் இலவச காய்கறி விநியோகத்தின்போது குறைவாக காய்கறி வழங்கப்பட்ட கோபத்தில் காய்கறிகடைக்காரரை ஒருவர் அடித்து கொலை செய்தார்.

  கொரானா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ஏழைகளுக்கு பாந்திரா அமைப்பினர் புதுடெல்லி காய்கறி சந்தையில் இலவசமாக காய்கறிகள் வழங்கி வருகின்றனர்.அப்போது  நான்ஹே என்ற நபருக்கு சாண்ட்லால் என்ற 65 வயது நபர் மற்றவர்களை விட குறைவாக காய் கறி வழங்கினார். இதனால் கோபமுற்ற நான்ஹே அந்த அமைப்பாளர்களுடன் சண்டையிடத் தொடங்கினார்  அதனால் அங்கிருந்தவர்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

  அப்போது திடீரென  நான்ஹே ஒரு தடியினை எடுத்து  சாண்ட்லாலின்  தலையில் அடித்தார். அதனால் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.போலிசார் குற்றம் சாட்டப்பட்ட நான்ஹே  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்,