காய்கறி இல்லையா கவலையே வேண்டாம்; கறிவேப்பிலை குழம்பு செய்வோம்!

  0
  3
  கருவேப்பிலை குழம்பு

  வீட்டில் குழம்பு செய்ய காய்கறி இல்லையா அல்லது தினமும் காய்கறியை வைத்து குழம்பு செய்ய போர் அடிக்குதா,அப்ப புது விதமான கருவேப்பிலை குழம்பு செய்து பாருங்க.புதுவிதமான டேஸ்ட்டில் அட்டகாசமா இருக்கும்

  வீட்டில் குழம்பு செய்ய காய்கறி இல்லையா அல்லது தினமும் காய்கறியை வைத்து குழம்பு செய்ய போர் அடிக்குதா,அப்ப புது விதமான கருவேப்பிலை குழம்பு செய்து பாருங்க.புதுவிதமான டேஸ்ட்டில் அட்டகாசமா இருக்கும். அவசரத்துக்கு இருப்பதைக் கொண்டு இப்படியெல்லாம் செய்யலாம்னு மத்தவங்ககிட்டயும் சொல்லி கெத்து காட்டிக்கலாம்.

  curry leaves

  தேவையான பொருட்கள் 

  கருவேப்பிலை – ஒரு பெரிய கொத்து 
  வெங்காயம் – 2
  சின்ன வெங்காயம் – சிறிதளவு 
  புளி – சிறிதளவு 
  பூண்டு – 6 பல்லு
  மிளகுத்தூள் – 1 tbsp 
  உதிர்த்த தேங்காய் – 1/2 கப் 
  சோம்பு – 1 tsp 
  ஜீரகம் – 1 tsp 
  மிளகாய் வற்றல் – 3
  எள் எண்ணெய் 
  கடுகு 
  உப்பு – சிறிது அளவு 

  செய்முறை 

  சின்ன வெங்காயத்தை தவிர்த்து மற்ற பொருட்களை அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக்  காயவைத்து ,கடுகு தாளித்து ,சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு  வதக்கவும்.அதன் பிறகு புளி கரைச்சலையும்  அரைத்த கலவையையும்  சேர்க்க வேண்டும்.

  curry leaves

  பின்பு தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ,அடுப்பில் நெருப்பை குறைத்து 20 நிமிடம் கழித்து, குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் இறக்குங்கள்.  சுவையான கருவேப்பிலை குழம்பு தயார்.

  இதையும் படிங்க: சுவையான பன்னீர் பஜ்ஜி எப்படி செய்வது?