காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு! – காஞ்சி பெரியவர்

  0
  39
  காஞ்சி பெரியவர்

  ஒரு சமயம் காஞ்சி மஹா பெரியவரைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் சென்றிருந்தனர். அப்படிச் சென்றவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை அவரிடத்தில் வெளியிட்டனர்.

  kanchi periyava

  ஒரு சமயம் காஞ்சி மஹா பெரியவரைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் சென்றிருந்தனர். அப்படிச் சென்றவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை அவரிடத்தில் வெளியிட்டனர்.
  சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண், தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும், அதனால் அந்தப் பகுதியில் பிராமணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

  gayathri manta

  அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மகான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்.
  “நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகி விடும்” என்றார்.
  மகானின் உத்தரவுக்கு மறுப்பேது ?
  அதே போல் அவர்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மகானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
  அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லாம் ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு” என்று சொல்லிய பின் காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிட முடியாதது என்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்.