காம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்

  406
  மாதிரிபடம்

  நமது சமூகத்தில் திருணம் என்பது மிகவும் வித்தியாசமான மற்றும் அவசியமான ஒரு ஏற்பாடாகும்.

  நமது சமூகத்தில் திருணம் என்பது மிகவும் வித்தியாசமான மற்றும் அவசியமான ஒரு ஏற்பாடாகும். ஒரு தம்பதியினரை இந்த சமூகம் அங்கீகரிக்கும் நிகழ்வாக திருமணம் அமைகிறது. ஆண், பெண் இருவரது வாழ்கையிலும் திருமணம் என்பது திருப்பு முனையாக அமைகிறது. 

  திருமணத்துக்குப் பிறகு அவர்கள் இருவரின் வாழ்க்கையும் ஒருவரை ஒருவர் சார்ந்ததாக இருக்கும். தற்போதுள்ள காலகட்டத்திலும், அறிவியலின் உதவியாலும் திருமணம் ஆகும் முன்பே ஆண், பெண் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள், இருப்பினும் அனைத்து தம்பதியினரின் வாழ்க்கையும் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு சாட்சிதான் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையாகும். 

  திருமணத்தின் போது செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அவை ஆண், பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் இல்லறம் சிறக்கவும் உதவும் என காம சாஸ்திரம் கூறுகிறது. 

  முதலிரவு:

  first night

  முதலிரவு திருமணத்துக்கு பிறகு நடத்தப்படும் முக்கிய சடங்காகும். திருமண பந்தத்தில் புதிதாக இணையும் ஆண், பெண் இருவரும் தங்களின் தாம்பத்திய வாழக்கையை தொடங்கும் இந்த சடங்கு இருவரும் கலவி கொள்வதால் மட்டும் நிறைவடைந்து விடாது, ஏனெனில் தாம்பத்யம் என்பது கலவி மட்டும் சார்ந்ததல்ல. முதலிரவு அன்று ஆண், பெண் இருவரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ள வேண்டிய சில சத்தியங்கள் உள்ளது. இந்த சாத்தியங்களை கடைபிடித்தால் இல்லறம் என்றும் நல்லறமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 

  ஏழேழு ஜென்மத்திலும் துணை:

  firstnight

  இது நாம் அனைவரும் கேள்விப்பட்ட ஒரு சத்தியம்தான். இதில் கேலி செய்வதற்கு எதுவுமில்லை. தீராக்காதலில் இணையும் ஆண், பெண் இருவரும் இந்த சத்தியத்தை நிச்சயம் செய்துகொள்ள வேண்டும். இது அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சத்தியமாகும், அவர்களின் தூய அன்பே அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் என்று கூறப்படுகிறது. எதிர்காலம், மறுஜென்மம் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் இப்படி சத்தியம் செய்வது அவர்களின் அன்பின் வெளிப்பாடாகும். எடை போடக்கூடாது:
  இயற்கையின் அடிப்படையில் நாம் எப்பொழுதும் ஒருவரின் செயல்கள், பழக்கவழக்கங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல், அவர்கள் எடுக்கும் முடிவுகள் போன்றவற்றை வைத்துதான் ஒருவர் எப்படி பட்டவர் என்ற முடிவுக்கு வருகிறோம். தீர விசாரிக்கும் முன் ஒருவரை பற்றி மற்றொருவர் எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்று சத்தியம் செய்து கொள்ள வேண்டும். இது உங்கள் இல்லறத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றும்.

  இருவருமே சரி சமம்:
  ஒருவரை ஒருவர் சமமாக நடத்த வேண்டும் என்று கண்டிப்பாக சத்தியம் செய்ய வேண்டும். சத்தியம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதனை கடைபிடிக்கவும் வேண்டும். பெரும்பாலானோர் இதனை கடைபிடிக்காமல் இருப்பதுதான் அவர்களின் திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்துகிறது. நமது சமூக கட்டமைப்பில் கணவன் உயர்ந்தவன் என்றும் மனைவி அவரை விட ஒருபடி குறைந்தவர் என்றும் ஒரு தவறான நம்பிக்கை உருவாக்க பட்டுவிட்டது. புது வாழ்வில் இணையும் இருவரும் ஒருபோதும் இதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது. 

  பரஸ்பரம் சுதந்திரம் தர வேண்டும்:
  திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பது ஒருவரின் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடும் போதுதான். எனவே சுதந்திரத்தை பறிக்கக் கூடாது என்ற சத்தியத்தை செய்து கொள்வதுதான் நல்ல இல்லறத்துக்கு வழிவகுக்கும்.

  துணையின் விருப்பங்களை மதித்தல்:
  தற்கால நடைமுறை திருமண வாழ்க்கை என்பது அதிக தேவைகளையும், ஆசைகளையும் உள்ளடக்கியதாகும். மற்றவர்களின் ஆசைகள் மதிக்கப்படுமென வாக்குறுதியளிப்பது ஒரு கடினமான ஒன்றாகும். ஆனால் இந்த வாக்குறுதியை கடைபிடித்து விட்டால் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், பிரச்னைகள் இல்லாததாகவும் இருக்கும்.

  நேரம் செலவிடுதல்:

  தன் துணைக்காக நேரம் செலவிடுவது என்பது மிகவும் அவசியமானது அதேசமயம் கடைபிடிக்க மிகவும் கடினமானதும் கூட. தம்பதிகள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் நேரத்தை கோருகிறார்கள், ஆனால் அவர்களால் பெரும்பாலும் அதனை கடைபிடிப்பதில்லை, அதுதான் பிரச்னையின் ஆரம்ப புள்ளியாக அமைகிறது. எனவே இந்த தவறை செய்யக்கூடாது என்ற வாக்குறுதியை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள வேண்டும்.

  ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுதல்:

  firstnight

  இது சுவாரஸ்யமான வாக்குறுதியாகும், தங்கள் ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிப்பதில் கணவன், மனைவி இருவருமே அக்கறையாக இருப்பார்கள். ஆனால் தங்களின் ஆரோக்கியம் மீது மட்டுமல்லாமல் தங்கள் துணையின் ஆரோக்கியம் மீதும் அக்கறையாக இருக்க வேண்டியது அவசியம். அதனை செய்வோமென்று சத்தியம் செய்துகொள்ள வேண்டும். 

  நோ சண்டை: 
  சண்டைகளும், வாக்குவாதங்களும் இல்லாத திருமண உறவே இருக்க முடியாது. சொல்லப்போனால் சண்டைதான் தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும். எக்காரணத்தை கொண்டும் பிரியும் நிலை வருமளவிற்கு சண்டை போடக்கூடாது என்று சத்தியம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.