காமெடி ஷோ காட்டும் எடப்பாடி… அலட்டிக்கொள்ளாத ஓ.பி.எஸ்..!

  0
  4
  எடப்பாடி பழனிசாமி

  எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு வரும்போது எங்கிருந்தோ பஸ், வேன்களில் அழைத்துவந்து ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால் ஓ.பி.எஸ் அதை பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை.

  இடைத்தேர்தலில் ஓ.பி.எஸின் கெத்து குறைந்தும், எடப்பாடி பழனிசாமியின் தோரணை  நவீனமாகவும் மாறி இருப்பதாக கூறுகிறார்கள்.

  தேர்தல் பிரசாரங்களில் எடப்பாடியாரின் பிரசாரம் எல்லாம் காமெடி நிகழ்ச்சிகளாக பாட்டு போட்டிகளில் மேடையில் பாடும்போது நவீன மைக் மூலம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், ஓபிஎஸ் வழக்கம்போல மைக்கை பிடித்து  பிரசாரம் செய்து வருகிறார். 

  ஆனாலும் எடப்பாடியாரின் தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை எடுத்து தரும் சிலர் உண்மை தகவல்களை தருவதில்லை என்கிறார்கள்.  இதனால், எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எடப்பாடி தவித்து வருகிறார். 

  ஓ.பி.எஸ்  வழக்கம்போல எளிமையாக பேசிவிட்டு நடையை கட்டுகிறார்.  எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு  வரும்போது எங்கிருந்தோ பஸ், வேன்களில் அழைத்துவந்து ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது.  ஆனால் ஓ.பி.எஸ் அதை பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை. 

  அதிமுக பொதுக்குழு  டிசம்பர் மாதம் கடைசியில் நடைபெற இருப்பதாக கூறுகிறார்கள்.  அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்படி அட்டவணைகள் தயாரிக்க அதிமுக  மேலிடம் அதிகாரிகளுக்கு திட்டம் வகுத்து கொடுத்து இருக்கிறதாம். அதை அப்படியே  தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி பொதுக்குழுவை கூட்டுவது குறித்து கால நீட்டிப்பை கேட்பதுதான் அதிமுகவின்  தற்போதைய திட்டம்.  அதற்கான செயல்வடிவமும் கொடுத்தாகி விட்டது. அதனால் முதலில் உள்ளாட்சி தேர்தல், பிறகு பொதுக்குழு  நடக்கும் என்கிறார்கள்.