காமராஜர், எம்ஜிஆர் வரிசையில்… நடிகர் விஜய்..! சத்தமில்லாமல் ஒரு சாதனை! 

  0
  4
  எம்ஜிஆர், விஜய்

  தமிழகத்தின் அந்த ஏரியா மட்டும் காலை நேரத்தில் அத்தனை பரபரப்பாக இருக்கிறது. ஏதோ கல்யாண வீட்டிற்கான சமையலைப் போல அதிகாலை 4 மணிக்கெல்லாம் தயாராகி அடுப்பைப் பற்ற வைத்து சுடச்சுட காலை உணவு தயாராகி வருகிறது. ஒவ்வொரு நாளும் இட்லி, வெண்பொங்கல், தோசை, பூரி என ஒவ்வொரு வகையான சிற்றுண்டி வகைகள். இதெல்லாமே விஜய் ரசிகர்களின் சேவைகள்.

  தமிழகத்தின் அந்த ஏரியா மட்டும் காலை நேரத்தில் அத்தனை பரபரப்பாக இருக்கிறது. ஏதோ கல்யாண வீட்டிற்கான சமையலைப் போல அதிகாலை 4 மணிக்கெல்லாம் தயாராகி அடுப்பைப் பற்ற வைத்து சுடச்சுட காலை உணவு தயாராகி வருகிறது. ஒவ்வொரு நாளும் இட்லி, வெண்பொங்கல், தோசை, பூரி என ஒவ்வொரு வகையான சிற்றுண்டி வகைகள். இதெல்லாமே விஜய் ரசிகர்களின் சேவைகள். நடிகர் விஜய்யின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ஆம் தேதி அவரது ரசிகர்களின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ‘விலையில்லா விருந்தகம்’ என்கிற திட்டத்தைத் துவங்கி, ஆதரவற்ற ஏழை மக்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு செயல்படுத்தப்பட்டது. வழக்கமாக நடிகர்கள் இப்படி துவங்கும் திட்டங்கள் எல்லாமே அதிகப்பட்சமாக ஒருவார காலத்தோடு காலாவதியாகிவிடும்.

  vijay fans

  முதல்வராக இருந்த போது ஜெயலலிதா துவங்கி வைத்த ‘அம்மா உணவக’ங்களே பல இடங்களில் அம்போவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், 75 நாட்களைக் கடந்தும், விலையில்லா விருந்தகத்தில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணியிலிருந்தே அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான காலை உணவுகள் சுடச்சுட வழங்கப்படுகிறது.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் நாள்தோறும் காலையில் நல்ல சுவையான உணவை வழங்குகின்றனர். காமராஜர் எம்ஜிஆர் ஆகியோரின் வரிசையில் நடிகர் விஜய்யின் இந்த விலையில்லா விருந்தகத்தின் பணிகளை மனதாரப் பாராட்டுகிறோம். இதனை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

  free food

  காலை 7.35-க்கு தொடங்கி 8.35 வரை உணவு வழங்கப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமான மக்கள் வந்திருந்து பசியாறுகின்றனர் எனத் தெரிவித்தனர். விலையில்லா விருந்தகம் மூலம் பயனடைந்த பத்தாயிரம் பேர் மதுரை வடக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் விஜய் அன்பன் கல்லாணை கூறுகையில், “காலை உணவை தவிர்த்து விட்டு அவசர அவசரமாக பணிக்குச் செல்பவர்கள் அதிகம். தெருவில் இருக்கும் ஏழைகளின் பசியை போக்கவே இந்தத் திட்டத்தை மதுரையில் நாங்கள் செய்து வருகிறோம்.விலையில்லா விருந்தகம் தொடங்கி இன்றுடன் 75ஆவது நாள் ஆகிவிட்டது.    தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் மேற்கொண்டு வருகின்ற இந்த விலையில்லா விருந்தகம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்திச் செல்வது மன நிம்மதியைத் தருகிறது” என்று தெரிவித்தார் மன மகிழ்வுடன்!