காப்பான் திரைப்படத்தை வெளியிடுவதற்கான  தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  0
  7
  காப்பான்

  நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்திற்கான தடையை நீக்கி  சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. காப்பான் திரைப்படம் தன்னுடைய கதை என ஜான் சார்லஸ் என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்திற்கான தடையை நீக்கி  சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

   காப்பான் திரைப்படம் தன்னுடைய கதை என ஜான் சார்லஸ் என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  நடிகர் சூர்யா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கே.வி.ஆனந்த இயக்கத்தில் காப்பான் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. இந்த தரைப்படத்தின் கதை கரு தன்னிடம் இருந்து எடுக்கப்பட்டதாக குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.சென்னை உயர்நீதிமன்றம்

  அந்த புகாரில் இயக்குநர் கே.வி.ஆனந்திடம் 2016 ஆம் ஆண்டு சரவேடி என்ற பெயரில் இந்த கதையை கூறியதாகவும். அதனை படமாக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி இயக்குநர் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ் குமார் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தி்ரவிட்டிருந்தார்.

  இதை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய விவாதத்தை கேட்காமலே இந்த தீர்ப்பை வழங்கியதாக தெரவித்திருந்தார்.

  இதற்கு பின் இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இப்படத்தை வெளியிட தடையில்லை என்று அறிவித்து உத்திரவிட்டார்.