காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்!

  0
  4
  மனோஜ் மஞ்சு

  கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

  நடிகர் மனோஜ் மஞ்சு தனது  காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

  பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்ற இரு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். மூவருமே திரைத்துறையில் பிஸியான நடிகர்களாக வலம்வருகின்றனர். இதில் மனோஜ் மஞ்சு கடந்த 2015 ஆண்டு தனது காதலி பிரணதியை திருமணம் செய்துகொண்டார்.

   

  இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து எதுவும்  சொல்லாமல் இருந்த மனோஜ் மஞ்சு தற்போது முதன்முறையாக இதுகுறித்து வாய்திறந்துள்ளார்.

  அதில், கனத்த இதயத்துடன் சொல்கிறேன். நாங்கள் கடந்த இரண்டு வருடமாகப் பிரிந்து இருக்கிறோம். மிகுந்த மனவலியுடன் 2 வருடத்திற்கு முன்பு  விவாகரத்து பெற்றோம்.  நன்றாக நேசித்த அழகான உறவை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி பார்க்கும் போது  திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் நடிகர் மனோஜ் மஞ்சு விவாகரத்து வாங்கியது தெரியவந்துள்ளது.