“காதல் பிரேக்-அப்…உலகமே முடிவுக்கு வந்ததாக கருதினேன்!” – சொன்ன பாலிவுட் பிரபலம் யார் தெரியுமா?

  0
  5
  Bollywood

  காதல் பிரேக்-அப் ஆனபோது உலகமே முடிவுக்கு வந்ததாக கருதியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்ய ராய் கபூர் பேட்டியில் கூறியுள்ளார்.

  மும்பை: காதல் பிரேக்-அப் ஆனபோது உலகமே முடிவுக்கு வந்ததாக கருதியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்ய ராய் கபூர் பேட்டியில் கூறியுள்ளார்.

  ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லராக ‘மலங்’ பாலிவுட் திரைப்படம் வருகிற பிப்ரவரி 7-ஆம்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆதித்ய ராய் கபூர், திஷா பதானி, அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பெண்களை வசீகரித்து வைத்திருக்கும் நடிகர்கள் பட்டியலில் ஆதித்ய ராய் கபூருக்கும் இடமுண்டு. மலங் திரைப்படத்தில் இவரது லுக்கை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், திஷா பதானியுடன் இணைந்து ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்தார். அதில் தன் காதல் அனுபவத்தை பற்றி ஆதித்ய ராய் கபூர் தெரிவித்துள்ளார்.

  அவர் கூறுகையில், “காதல் என்பது மிக முக்கியமானது மற்றும் அத்தியாவசியமானது. அது எந்த மாதிரியான காதலாக கூட இருக்கலாம். குடும்பம், நண்பர்கள் அல்லது செல்லப்பிராணிகள் மீதான காதலாக கூட இருக்கலாம். காதல் என்பது நம் அனைவருக்கும் தேவையானது. ஒன்பதாவது படிக்கும்போது என்னுடைய முதல் காதல் பிரேக்-அப் ஆனது. அப்போது உலகமே முடிவுக்கு வந்ததாக கருதினேன். அந்த பிரேக்-அப் மிகவும் வலி கொண்டதாக இருந்தது” என்றார். அப்போது அருகில் இருந்த திஷா பதானி ஆதித்ய ராயை கலாய்த்து சிரித்தார்.