காதல் படுத்தும் பாடு! ‘அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு… தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள்!! 

  24
  Murder

  மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தத்தெடுத்து வளர்த்த மகளே தந்தையை கொடூரமாக கொன்று, ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தத்தெடுத்து வளர்த்த மகளே தந்தையை கொடூரமாக கொன்று, ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மும்பையை சேர்ந்த இசை கலைஞர் ரெபெல்லோ, இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீதியில் அனாதையாக சுற்றித்திரிந்த ஆராதியா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துவந்தார். இந்நிலையில் ஆராதியாவுக்கும், அவர் வீட்டருகே இருக்கும் 16 வது சிறுவனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. திடீரென தனது காதலருடன் சேர்ந்து, தனது தந்தையை கொலை செய்த ஆராதியா, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து அதை மிதி ஆற்றின் ஓரம் வீசியுள்ளார். 

  Murder

  இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆராதியா தான் கொலை செய்தது உறுதியானது. அத்துடன் “அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்.கடவுளே என்னை மன்னியுங்கள். நான் மிகவும் தவறான பெண்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது தந்தையை கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஆராதியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தந்தை நீண்ட நாட்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இது எனக்கு பிடிக்காததால் காதலருடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மும்பை காவல்துறையினர், ஆராதியாவையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலரையும் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.