காதல் திருமணம் செய்த பெண்ணை கவுரவக் கொலை செய்யத் திட்டம்… எஸ்.பி அலுவலகம் வந்த மாமியார்!

  0
  2
  honour-killing

  காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண்ணை கடத்திச் சென்ற அவரது உறவினர்கள் கௌரவக் கொலை செய்ய உள்ளதாக அந்த பெண்ணின் மாமியார் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த துவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தானம்மாள் (53). இவர் நாகர்கோவில் உள்ள போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்துக்கு உறவினர்களுடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். 

  காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண்ணை கடத்திச் சென்ற அவரது உறவினர்கள் கௌரவக் கொலை செய்ய உள்ளதாக அந்த பெண்ணின் மாமியார் போலீஸ் சூப்பிரெடெண்ட் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த துவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தானம்மாள் (53). இவர் நாகர்கோவில் உள்ள போலீஸ் சூப்பிரெடெண்ட்  அலுவலகத்துக்கு உறவினர்களுடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். 
  அதில், “என்னுடைய 2வது மகன் பியூட்லினும், வெள்ளிச்சந்தை அறப்புரை காலனியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகள் சரண்யாவும் கடந்த 23ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த புகார் அடிப்படையில் பியூட்லினும், சரண்யாவும் போலீஸ் விசாரணைக்கு சென்றனர். போலீஸ் நிலையம் அருகே மறைந்திருந்த கும்பல் திடீரென்று அவர்களைத் தாக்கி, சரண்யாவைக் கடத்தி சென்றுவிட்டது. இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
  மருமகளை நாங்கள் மீட்க முயன்றபோது கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், பியூட்லினை கைவிட சரண்யா மறுத்தால் அவரை கௌரவக் கொலை செய்துவிடுவோம் என்றும் கூறினர். இது குறித்து போலீசில் தெரிவித்தோம். அப்போதும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சரண்யாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
  மருமகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாமியார் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.