காதலியை வேவு பார்க்க வெட்டிய குழியில் சிக்கி உயிருக்கு போராடிய முன்னாள் காதலர்: பின்னணி என்ன?

  0
  7
  சுரங்கத்தில் சிக்கிய நபர்

  காதலியை வேவு பார்ப்பதற்காக வெட்டிய குழியில் காதலனே சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

  மெக்ஸிகோ: காதலியை வேவு பார்ப்பதற்காக வெட்டிய குழியில் காதலனே சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

  மெக்ஸிகோ நாட்டின் போர்டோ பெனாஸ்கோ நகரை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த தன்னுடைய முன்னாள் காதலியை உளவு பார்க்க நினைத்துள்ளார். அதன்படி அந்த பெண்ணின் வீட்டின் கீழே சுரங்கம் ஒன்றை சில நாட்களாகத் தோண்டியுள்ளார். 

  man

  இந்நிலையில், அந்த பெண்ணின் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டுள்ளது. அதை அந்த பெண் கண்டுகொள்ளாமல் விட்டுவிட,ஒரு நாள் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் சத்தம் வந்த இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சுரங்கம் ஒன்று இருப்பதையும் அதில்  14 ஆண்டுகளுக்கு முன்னர் தான் காதலித்த நபர் சிக்கி இருப்பதையும் கண்டு அதிர்ந்து போயுள்ளார். 

  man stuck

  இதையடுத்து இது குறித்து  போலீஸுக்கு தகவல் கொடுக்க, மயக்க நிலையிலிருந்த அந்த நபரை சுரங்கத்திற்குள் இருந்து மீட்டனர். இது குறித்துக்  கூறிய அப்பெண், மீட்கப்பட்டவர் என் முன்னாள் காதலர். அவரின் பொறாமை குணத்தால் நான் அவரை 14 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டேன். குடும்ப வன்முறை பிரிவின் கீழ் என்னைத் தொல்லை செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். 

  man

  இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறி அப்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த அந்த நபரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.