காதலிக்க மறுத்ததால் 8ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த காதலன்! 

  0
  3
  கொலை

  காதலிக்க மறுத்ததால் 8ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

  காதலிக்க மறுத்ததால் 8ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

  சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் நித்தியா (26) என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று வீட்டின் மாடியில் நின்றுகொண்டிருந்த சிறுமியிடம் நித்யா காதலை கூறியுள்ளார்.

  Murder

  அந்த சிறுமி காதலை ஏற்க மறுத்ததால் நித்தியா மறைத்து வைத்து இருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.  மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய நித்தியாவை அமைந்தகரை  போலீசார் தேடி வருகின்றனர்.