காதலிக்காக… விமான கடத்தல் மிரட்டல் விடுத்த தொழிலதிபருக்கு ரூ.5 கோடி அபராதம்

  0
  3
   தொழிலதிபர்

  ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 2017-ம் ஆண்டு விமான கடத்தல் மிரட்டல் விடுத்த மும்பை தொழிலதிபர் பிர்ஜூ சாலாவிற்கு 5 கோடி அபராதம் விதித்து, அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
  மும்பையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிர்ஜூ கிஷோர் சாலா. இவர் கடந்த 2017ம் வருடம் அக்டோபர் மாதம் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலமாக மும்பையிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். நடுவானில், விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது, விமானத்தின் கழிவறைக்கு சென்ற பிர்ஜூ சாலா,

  ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 2017-ம் ஆண்டு விமான கடத்தல் மிரட்டல் விடுத்த மும்பை தொழிலதிபர் பிர்ஜூ சாலாவிற்கு 5 கோடி அபராதம் விதித்து, அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
  மும்பையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிர்ஜூ கிஷோர் சாலா. இவர் கடந்த 2017ம் வருடம் அக்டோபர் மாதம் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலமாக மும்பையிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்தார்.

  jet airways

  நடுவானில், விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது, விமானத்தின் கழிவறைக்கு சென்ற பிர்ஜூ சாலா, கழிவறையில்  ‘விமானத்தில் கடத்தல்காரர்கள் உள்ளனர். விமானத்தில் சரக்கு பகுதியில் வெடிகுண்டு உள்ளது. விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கொண்டு செல்ல வேண்டும். அல்லா மேன்மையானவர்’ என்று மிரட்டல் குறிப்பு ஒன்றை ஆங்கிலத்திலும், உருது மொழியிலும் எழுதி வைத்து விட்டு, எதுவும் தெரியாதவர் போல பயணிகளுடன் பயணியாக இருந்து விட்டார். 
  இது குறித்து விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் இது புரளி என்று தெரிய வந்தது.

  businessman

  பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருந்தால், ஆசாத் காஷ்மீர் என எழுதியிருப்பர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என  கூறமாட்டார்கள். இது விமான பயணி ஒருவரின் குறும்பு செயல் என்று போலீசார் கண்டுப்பிடித்தனர். மிரட்டல் குறிப்பை வைத்து விட்டு வந்த பிர்ஜூ சாலா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தி விசாரணையில் மிரட்டல் குறிப்பு வைத்ததை ஒப்புக் கொண்டார். 
  தொடர் விசாரணையில், ‘தன்னுடன் வசிக்க மறுத்த தனது காதலியைப் பழிவாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டார்.  அந்தப் பெண், டெல்லி ஜெட்ஏர்வேஸில் பணியாற்றுவதாகவும், இது போல் செய்தால், ஜெட் ஏர்வேஸை மூடி விடுவார்கள், அவளும் வேலையிழந்து கஷ்டப்படுவாள்’ என்று செய்ததாக விசாரணையில் சாலா கூறியிருந்தார். உருது மொழியில் எழுதுவதற்கு கூகிள் மொழிப்பெயர்ப்பு கருவியைப் பயன்படுத்தி இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

  businessman

  அவர் மீது விமான கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படும் முதல் நபர் இவர்தான். மேலும்  அப்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ ஆலோசனையின் பேரில் இவர் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவருக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.