காதலர் பிறந்தநாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்!

  0
  1
  விக்னேஷ் சிவன்- நயன்தாரா

  நயன் தாராவின் பிறந்தநாளன்று  லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட கேக் மற்றும் அலங்கார விளக்குகள் என அமர்க்களப்படுத்தினார். 

  இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 34 வது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

  nayan

  நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் மூலம் காதல் மலர்ந்தது. அதையடுத்து நயன்தாராவின் பிறந்தநாள், காதலர் தினம் என முக்கியமான தினங்களில் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் நயன்தாராவின் பிறந்தநாளன்று  லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட கேக் மற்றும் அலங்கார விளக்குகள் என அமர்க்களப்படுத்தினார். 

  nayan

  இந்நிலையல் இயக்குநரும்  நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் இன்று தனது 34 வது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அவருக்காக நயன்தாரா பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் இருவரும் கருப்பு நிற ஆடையில் அழகாக தோற்றமளித்துள்ளனர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.