காதலர் கவினுக்கு ஆதரவு தெரிவித்த சாக்ஷி அகர்வால் 

  0
  2
  சாக்ஷி அகர்வால்

  நடிகை சாக்ஷி அகர்வால் காதலர் கவினுக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

  சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் காதலர் கவினுக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

  பிக்பாஸ் வீட்டில் லவ் பர்ட்ஸ் போல் சுற்றி திருந்தவர்கள் கவின்-லாஸ்லியா.நன்றாகச் சென்று கொண்டு இருந்த இவர்கள் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு பெரிய பூகம்பமே வெடித்தது. அதனால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் பாதி ஆட்டத்தில்  வெளியேறினார். 

  இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கவினின் தாயார் உள்பட அவரது குடும்பத்திலிருந்து மூன்று பெண்கள் மோசடி வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றனர். அதையொட்டி கவினை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

  இதனால் கடுப்பான சாக்ஷி தனது காதலர் கவினுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘கவின் குடும்பத்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணமான சூழலில் கவினையும் அவரது குடும்பத்தினரையும் யாரும் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை, அவருடைய குடும்பத்தினர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.  எனவே எனது ரசிகர்கள் கவின் குடும்பத்தினர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் மாறாக அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.