காதலரை முதலாளியாக்கிய நயன்தாரா!  காதலுக்கு கண்ணில்லை!

  0
  1
   நயன்தாரா

  யார் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போங்க… சிம்பு, பிரபுதேவா காதல் தோல்வி, விக்னேஷ் சிவனுடன் லிவிங் டூ கெதர், விக்னேஷ் சிவனுடன் கல்யாணம் முடிஞ்சிடுச்சு.. இப்படி எதை கிளப்பி விட்டு பரபரப்பாக்கினாலும் கொஞ்சமும் கவலையே படாதவர் நயன்தாரா. ஏற்கெனவே சிம்புவால் சில கோடிகளை இழந்திருக்கிறார், பிரபுதேவாவின் லண்டன் நடன பள்ளி ஆசைக்காக பல கோடிகளை இழந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது காதலர் விக்னேஷ்சிவனை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்திருக்கிறார் நயன்தாரா.

  nayanthara

  ஆனால் இம்முறை சொல்லி வைத்து, ஹிட்டடிக்கிற முயற்சியில் விட்ட பணம் எல்லாம் திரும்ப வந்துவிடும் என்கிறார்கள். அப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து, விக்னேஷ் சிவன் தயாரிப்பில், கால்ஷூட்டும் கொடுத்திருக்கிறார்.
  இந்த படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் தான் இயக்குநர். திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்கிற பெயரில் தயாரிக்கிறார்கள். 

  vignesh shivan

  படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மேலும், படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தான் காதலுக்கு கண் இல்லைன்னு சொல்றாங்களோ?!