காதலருடன் நெருக்கமாக இருக்கும் முகின் காதலி: அப்போ முகின் சொன்னது? என்னய்யா ஒரே குழப்பமா இருக்கு..!

  0
  4
  நதியா

  முகின் மலேசியாவில் நான்  நதியா என்பவரை காதலிக்கிறேன். நிகழ்ச்சி முடிந்து வந்ததும் அவர் தன் பதிலை சொல்வதாக கூறியிருக்கிறார்

  முகின் ராவ் காதலிப்பதாக கூறிவரும் நதியா தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசியாவை  சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என ஆரம்பத்தில் உற்சாகமாகக் காணப்பட்டார்.  போட்டியாளர்கள் தங்களை பற்றி அனைவர் மத்தியிலும் கூறிய போது, முகின்  சிறுவயதிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறி அனைவரையும்  சோகத்தில் ஆழ்த்தினார். இதனால் முகினிடம் பாசம் காட்டிய அபிராமி பலமுறை தான் முகினை காதலிப்பதாக வெளிப்படையாக கூறினார். 

  ஆனால் முகின் மலேசியாவில் நான்  நதியா என்பவரை காதலிக்கிறேன். நிகழ்ச்சி முடிந்து வந்ததும் அவர் தன் பதிலை சொல்வதாக கூறியிருக்கிறார் என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் அபிராமி தொடர்ந்து முகினுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்.
  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முகினிடம்,  நதியாவிடம் கேட்டு விட்டீர்களா அவருடைய பதில் என்ன ?  சம்மதித்து விட்டாரா ? என்று கேள்வி கேட்ட போது, எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க என்று கூறினார் முகின். 

   

  இந்நிலையில் முகின்  ஒருதலையாக காதலித்து வரும் நதியா,  புவிந்திரன்  என்பவரை 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பதில்  உள்ளனர்.