காதலருடன் சுசீந்திரம் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாரா

  0
  3
  நயன்தாரா

  இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து கொடுக்க இருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார்.

  ஆர்.ஜே. பாலாஜி  அடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்துள்ள   திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.  இப்படத்தில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக   நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து கொடுக்க இருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார்.

  ttn

  இப்படத்தின் பூஜையானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் கடந்த 29ஆம் தேதி  நடைபெற்றது. இதில் நடிகை ஊர்வசி, மௌலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால்  வழக்கம்போல் நயன்தாரா பங்கேற்கவில்லை. 

  ttn

  இந்நிலையில் நடிகை நயன்தாரா கன்னியாகுமரியில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நிலையில், இதனிடையே  தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்ற நயன்தாரா அங்கு சாமி தரிசனம் செய்தார்.  இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  முன்னதாக பிரசித்திபெற்ற பகவதியம்மன் திருக்கோயிலுக்குக் கடந்த 9ஆம் தேதி  விக்னேஷ் சிவனுடன்  நயன்தாரா சாமிதரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.