காஞ்சனா: அக்‌ஷய் குமாருக்கு வில்லனாக நடிக்கும் பாபு ஆண்டனி!

  0
  4
  பாபு ஆண்டனி

  சென்னை: காஞ்சனா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் பாபு ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

  தமிழில் ஹிட்டான காஞ்சனா படத்தை லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்து வருகிறார். இதில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

  இந்த நிலையில் இதில் சூரியன், விண்ணைத்தாண்டி வருவாயா, காக்கா முட்டை, அடங்கமறு உட்பட ஏராளமான படங்களில் வில்லனாக நடித்த பாபு ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்தியில் ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கிறேன். இதில் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். 

  bomb

  அக்ஷய்குமாருடன் நடிக்கக் காத்திருக்கிறேன். இதில் நான் இளைஞனாகவும் வயது முதிர்ந்தவனாகவும் நடிக்க இருக்கிறேன். நான் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மும்பையில் தொடங்கவுள்ளது’ என்று கூறியுள்ளார்.