காங்கிரஸ் மூத்த தலைவரின் காலில் விழுந்த ரஜினிகாந்த்!

  0
  3
  Rajinikanth

  சென்னை எம்.ஆர்.சி நகரில் சாணக்கியா யூடியூப் சேனல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில்நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார். விழாவில் நல்லக்கண்ணு, குமரி ஆனந்தன் மற்றும் இல.கணேசனுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து நடிகர் ரஜினிகாந்த்
  ஆசி வாங்கினார். 

  Rajinikanth

  அதன்பின் பேசிய அவர், “தேர்தல் நெருங்கும் போது நான் போட்ட புள்ளி அரசியல் சுனாமியாக மாறும். நான் சொன்ன அரசியல் அற்புதம் நிச்சயம் நிகழும். அரசியலில் நான் வைத்த புள்ளி அலையாக மாறியது, தற்போது சுழலாக உள்ளது. விரைவில் சுனாமியாக மாறும்” என தெரிவித்தார்