காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா?

  0
  1
  ஊர்மிளா

  நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  மும்பை: நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  கனவுக்கன்னி நடிகை ஊர்மிளா

  urmila

  பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்  தமிழில் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மெகா ஹிட் அடித்த, இந்தியன் படத்தில் நடித்து மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர்  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ரங்கீலா, சத்யா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இது தவிர  மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் ஊர்மிளா  நடித்துள்ளார்

  முனைப்புக் காட்டும் அரசியல் கட்சிகள் 

  rahul

  இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்களைத் தாண்டி,  நடிகர், நடிகைகளைத் தேர்தல் களத்தில் களமிறக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. 

  மும்பை வடக்கு தொகுதியில்  போட்டி 

  urmila

  அதன்படி,  மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா மடோன்கர் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக மும்பை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை நடிகை ஊர்மிளா நேற்று சந்தித்து  காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இந்த வார இறுதிக்குள், ஊர்மிளா போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

  இந்த தொகுதியில் போட்டியிட நடிகை நக்மா உள்ளிட்ட சிலர் பெயர்கள் பரிந்துரையிலிருந்து வந்த நிலையில், ஊர்மிளாவை களமிறக்கக் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. கடந்த  2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்  மும்பை வடக்குத் தொகுதியில் பிரபல நடிகர் கோவிந்தா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

  இதையும் வாசிக்க: தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!