காங்கிரஸ் எனும் குட்டி பாஜக: பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டம்

  0
  3
  cow

  பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இருக்கிறது மத்திய பிரதேசத்தின் ஆளும் பாஜக அரசாங்கம்.

  போபால்: பசுக்களை பாதுகாக்க 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இருக்கிறது மத்திய பிரதேசத்தின் ஆளும் பாஜக அரசாங்கம்.

  மத்திய பிரதேச அரசாங்கம் பசுக்களை பாதுகாக்க அம்மாநிலத்தில் 1,000 மாட்டுக் கொட்டகை அமைக்க இருக்கிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1 லட்சம் பசுக்களுக்கு இருப்பிட வசதி கிடைக்கும். அங்கு பசுக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து முதல்வர் கமல்நாத்தின் பாதுகாப்பு அதிகாரி பூபேந்திர குப்தா, வருகிற மே மாதத்துக்குள் 1,000 மாட்டுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு பசுப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

  மேலும் அவர், இதற்கான செலவு 450 கோடி ரூபாய் ஆகும். மத்திய பிரதேச மாநிலத்தில் இப்படியான திட்டம் அறிமுகமாவது இதுவே முதல்முறை, 6 லட்சம் பசுக்களுக்கு இம்மாநிலத்தில் பாதுகாப்பு அவசியமானதாக இருக்கிறது என கூறியிருக்கிறார். பசுக்களை வைத்து அரசியல் செய்த பாஜகவின் பாலிசியை காங்கிரஸும் பின்பற்றுகிறது. இந்தியாவில் 4-ஆவது ஏழை மாநிலமாக இருக்கிறது மத்திய பிரதேசம். மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றாமல் மாடுகளின் நலனில் அக்கறை காட்டுவது இந்துத்துவ மனநிலைக்கு சலைத்தல்ல என விமர்சனம் எழுந்து வருகிறது.