காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு.

  0
  1
  Amit shah

  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் பிரதமர் போல நடந்து கொண்டு, பிரதமருக்கு மதிப்புக் கொடுக்க வில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார். 

  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் பிரதமர் போல நடந்து கொண்டு, பிரதமருக்கு மதிப்புக் கொடுக்க வில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார். 

  Amit shah

  டெல்லியில் இன்று பேசிய அவர், காங்கிரஸின் பல கட்சி ஆட்சி முறைப்படி இலக்கை ஜனநாயகம் அடைய முடியவில்லை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எல்லையில் பதற்றமும் நாட்டில் ஊழலுமே அதிகமாக  காணப் பட்டது. மேலும், அரசியல் ரீதியாக காங்கிரஸ் முடங்கி  எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருந்துது என்று கூறியுள்ளார். 

  மேலும், மோடி அரசின் 5 ஆண்டு காலத்தில் 50 துணிச்சளான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், இதுவரை பிரதமர் வாக்கு அரசியலுக்காக எந்த முடிவும் எடுத்ததில்லை என்றும் காஷ்மீரின் 370 ஆவது பிரிவு தடை  செய்யப் பட்டபோது எந்த விதமான துப்பாக்கி சத்தமும் எழவில்லை என்று காங்கிரசுக்கு எதிராகவும், பிரதமரின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.