கவின்- லாஸ்லியா காதல் லீலைகள்: குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த கமல் 

  0
  2
  சீமான்

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர். 

  இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சேரன், கஸ்தூரி,சாண்டி மற்றும் தர்ஷன் ஆகிய 4 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோவில் கமல்ஹாசன், ஹவுஸ் மேட்ஸ்யிடம் இந்த வாரத்திற்கான லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய உரையாடுவது போல் வெளியாகியுள்ளது. 

  அதில், ‘உங்க லக்ஜூரி பட்ஜெட் ஏன் குறைந்ததது தெரியுமா? இது ஒரு விதிமீறல். இந்த விதிமீறல் விளையாட்டை வெற்றிபெற முடியாது என்பதை இரண்டு பேருக்கு ஞாபகப்படுத்த ஒரு படம். இது ஒரு குறும்படம் அல்ல விளக்கப் படம். உங்களுக்கு விளக்குவதற்காக’ என்றார். 

  #Day62 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/5Wvus21Krm
  — Vijay Television (@vijaytelevision) August 24, 2019

  அதில் இரவு நேரத்தில் தனியாக லாஸ்லியா மற்றும் கவின் அமர்ந்து கொண்டு பேசுவது போல் உள்ளது. இதை கண்ட ஷெரின் வாய்பிளக்குவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் இன்றைய எபிசோட் தரமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சியம்.