கவின், லாஸ்லியாவுக்கு விருந்து கொடுத்த கமல்ஹாசன்!

  0
  6
  கமல்ஹாசன்

  கவின், லாஸ்லியா உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் விருந்து கொடுத்துள்ளார்.

  கவின், லாஸ்லியா உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் விருந்து கொடுத்துள்ளார். 

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று சீசன்களை முடித்துள்ளது. மக்களிடம் பெரிதும் வரவேற்கப்பட்ட பிக்பாஸ் 3 அண்மையில் முடித்து முகன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார். வழக்கம்போல் காதல், நட்பு, மோதல், துரோகம் உள்ளிட்டவற்றுடன் தொடங்கிய பிக்பாஸில் இரண்டவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் கவின் – லாஸ்லியா காதலும், கவின் – சாண்டியின் நட்பு, வி ஆர் தி பாய்ஸ் அணியும் பிரபலமாக பேசப்பட்டது. 

  treat

  இந்நிலையில் கவின் லாஸ்லியா சாண்டி மற்றும் அபிராமிக்கு கமல்ஹாசன் விருந்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலாவருகிறது. அந்த புகைப்படத்தில் அனைவரும் போஸ் கொடுக்க கவின் மட்டும் லாஸ்லியாவை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். லாஸ்லியா இலங்கை சென்றுவிட்ட நிலையில் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்ற கருத்தும் பரவலாக சொல்லப்படுகிறது.