கவின் மட்டும் தான் காதல் செய்வார்: கடைசியில் நண்பனைக் கலாய்த்த சாண்டி 

    0
    1
    பிக் பாஸ்

    பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

    சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை நெருங்குகிறது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் நான்கு பேர்களிடமும் லூட்டி அடித்து கொண்டு இருந்த கவின் ஒரு கட்டத்தில் சாக்ஷி மற்றும் லாஸ்லியா என்று குறைத்துக் கொண்டார். பிறகு  லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாட்சியாய் கழட்டி விட்டு அவருடன் காதலில் விழுந்துவிட்டார். நாள்தோறும் இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 

    இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில்,இன்றைய கிராமத்து டாஸ்க்கில் வில்லுப்பாட்டு ஒன்றை சாண்டி பாடி கவினின் காதலை பங்கமாகக் கலாய்க்கின்றார். சாண்டியின் பாடலுக்கு ஆமாம், ஆமாம் என்று முகின், வனிதா, லாஸ்லியா கோரஸ் போடுகின்றனர். 

    மொத்தத்தில் இந்த வார கிராமத்து டாஸ்க்கில் பிரச்சனை இன்றி சுமுகமாக எண்டர்டெயினாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.