கவின் என்னுடைய கிரஷ்… அவன் சம ஹாண்ட்சம்ல- அபிராமி ஓபன் டாக்! பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்!!

  0
  8
  அபிராமி

  தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதலாவது நாளான இன்று என்ன நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்

  தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதலாவது நாளான இன்று என்ன நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்

  முதல் நாளான இன்று காலையிலிருந்து அனைவரும் தேவையான பொருட்கள், சமைப்பதற்கான பொருட்களை பிக்பாஸ் வழங்கினார். அதன்பின் ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளும், வேலைகளும் ஒதுக்கப்பட்டன…. வழக்கம்போல் கிளினிங் அணி, குக்கிங் அணி மற்றும் பாத்திரம் கழுவும் அணி என ஒதுக்கப்பட்டன. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அற்புதமாக நடந்தேறியது.

  இறுதியாக இரவு 10.15 மணிக்கு விளக்குகளை அணைத்த பின் அபிராமியும், ஷெரினும் வெளியில் உள்ள தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீவிரமான பேச்சு யாரை பற்றி என்று உற்றுப்பார்த்தால் அது கவினை  பற்றியது… என்னுடைய பேஸ்புக் நண்பன் கவின் , அவன் ரொம்ப ஹாண்ட்ஸம்ல… நான் சொன்னா அவன் நம்புவானா… அவன் என்னோட கவின்  … அவனுக்கு நான் தனியா மெசெஜ்லாம் பண்ணிருக்கேன்… அவன் பிறந்தநாளன்று முதன்முதலாக வாழ்த்துக்கூறினேன் என அடுக்கி கொண்டே சென்றார் அபிராமி… அதைக்கேட்டு ஷெரின் சோகமாக அப்படியா என கூறினார். உடனே அங்குவந்த சாக்‌ஷி… இதைக்கேட்டு அதிர்ச்சியடையக்கூடிய நிகழ்வுகளே இன்றைய கசமுசாவாக தெரிந்தது.