கவினின் காதல் அலப்பறைகள்: கடுப்பில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய ஷெரின்!

  0
  1
  பிக் பாஸ் 3

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகினும் வெற்றி பெற்றார்கள். மேலும் நேற்று நடந்த  டாஸ்கில் முகின் மற்றும் சேரன் வெற்றி பெற்றனர்.  

  sherin

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், புதிய டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கவின் லாஸ்லியாவிடம், விளையாடுறியா இதுக்கு அப்புறம் என்று கேட்க, அதற்கு லாஸ்லியா போய்  விளையாடு; கேம் விளையாடு முடிய பேசிக்கலாம் என்று சொல்லி சமாதானம் செய்கிறார். அதற்கு ஷெரின் ஆட விருப்பம் இல்லனா எதுக்கு விளையாட வரீங்க என்று கேட்கிறார். அதற்கு கவின் நான் ஆட தான் வந்தேன் மச்சா என்று  சொல்ல, அதுக்கு ஷெரின் நீ அங்க போற நாங்கல்லாம்  ஹோல்ட்டுல இருக்கனும் என்று கேட்க என்ன நியாயமா விளையாடிட்டிங்க நீங்கலாம் என்று கேள்வி கேட்கிறார். இதனால் கடுப்பான ஷெரின், பந்துகள் இருந்த பாஸ்கெட்டை எட்டி உதைத்துவிட்டு இவனும் இவன் கேம்மும் என்று திட்டிக்கொண்டே செல்கிறார்.

   

  ஏற்கனவே லாஸ்லியாவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற பெயரில் சாண்டியை  திட்டிய கவின், தற்போது மீண்டும் அதே செயலால் ஷெரினை கடுப்பேற்றியுள்ளார்.