கவினிடம் சண்டை போட்ட தர்ஷன்: அதிர்ச்சியான சாண்டி

  0
  1
   பிக் பாஸ்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகினும்  வெற்றி பெற்றார்கள்.

  bb

  அதன்படி பிக் பாஸ் போட்டியில் இன்று, வட்டத்துக்குள் ஓடி கொண்டு மற்ற ஹவுஸ்மேட்ஸ் கோணிப்பையில் உள்ள தெர்மாகோலை வெளியேற்றவேண்டும் என்ற போட்டி நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தர்ஷன் கவினிடம், நீ ஓட்டையை பிடிச்சி  பெருசாக்கிட்டு புரிதான்னு கேட்குற என்று கோபப்பட அதற்கு கவின் அவரை சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனால்  தர்ஷனோ, முதல் ரவுண்டு யாரும் பேக்கை பிடிச்சு இழுக்கல. என் ஸ்பீடுக்கு என்னால ஓடமுடியலன்னா, என் முன்னாடி ஷெரின் ஓடிட்டு இருந்தா. அந்த நேரம் பார்த்து பேக்கை  பிடிச்சி இழுத்தா எனக்கு கோபம் தான் வரும்’ என்று மல்லுக்கட்டுகிறார். 

   

  பிக் பாஸ் வீட்டுக்குள் நண்பர்களாக வலம்வந்த கவினும் தர்ஷனும் முதல்முறையாக முட்டிக்கொள்வது போட்டியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக  உள்ளது.