கவலையுடன் வெளியேறிய பெங்களூர்: மூன்றாவது ஆண்டாக விராட் அணிக்கு நடந்த சோகம்!

  0
  3
  விராட்கோலி

  விராட்  கோலி தலைமையிலான பெங்களூர் அணி, 3 வது ஆண்டாக முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 

  பெங்களூர்: விராட்  கோலி தலைமையிலான பெங்களூர் அணி, 3 வது ஆண்டாக முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 

  rcb

  ஐ.பி.எல் சீசனின் 49-வது லீக் போட்டியில் பெங்களூர்  அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

  rain

  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில்  மழையின் காரணமாகத் தாமதமானது. இருப்பினும் தொடர் மழையால் போட்டி 5 ஓவர் கொண்டதாகப் போட்டி மாற்றப்பட்டது.

  rr

  இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணி 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு அந்த அணி, 62 ரன் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டும் ஓஷானே தாமஸ் 2 விக்கெட்டும் உனட்கட், பரங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

  rain

  இதைத் தொடர்ந்து  களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்திருந்த நிலையில்  மறுபடியும் மழை பெய்தது. இதனால் கைவிடப்பட்ட ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

  rain

  இதனால் பிளே ஆப் சுற்றிலிருந்து பெங்களூர் அணி வெளியேறியது. இதனால் பெங்களூர் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.