கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் சிறை : மத்திய அரசு அதிரடி! 

  0
  2
  Gun

  கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தாலோ, ஆயுதங்களை கடத்தினாலோ சாகும் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  ஆயுதங்கள் சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துவது, நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது, திட்டமிட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  gun

  அதன்படி சட்டவிரோதமாக வெளியாடுகளிலிருந்து இறக்குமதி செய்த துப்பாக்கியை உள்நாட்டில் விற்பனை செய்தால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.