கள்ளக்காதலைத் தட்டிக்கேட்ட நபர் படுகொலை…பட்ட பகலில் நடந்த பயங்கரம்!

  0
  4
  கொலை

  அழகுராஜன் என்னை கண்டித்தார். அதனால் அவரை கொலை செய்தேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

  தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அழகுராஜன். இவருக்கு திருமணமாகி  அகிலேஷ், அஜய் என்ற 2 மகன்களும் உள்னர். அழகுராஜன் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அதனால் அவர் பலசரக்குகளை எடுக்க கழுகுமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று கழுகுமலைக்கு சென்ற அழகுராஜனை வழிமறித்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அழுகுரஜன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

  ttn

  இதைத்தொடர்ந்து கொலை செய்த இளைஞர் மகேந்திரன் போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் , எனக்கும் திருமணமான பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருந்தது. இதை தெரிந்துகொண்ட அழகுராஜன் என்னை கண்டித்தார். அதனால் அவரை கொலை செய்தேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

  ttn

  இதனிடையே அழகுராஜனின் உறவினர்கள் படுகொலை குறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது  அந்த வழியாக வாகனத்தில் சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியரை மறித்தும்  போராட்டம் செய்தனர். ஆனால்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு அவர்கள் கலைந்து  சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.